உலகிலே மிக நீளமான தாடி வளர்த்து கின்னஸில் இடம்பிடித்த பெண்!
உலகிலே மிக நீளமான தாடியை வளர்த்த பெண் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்க பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளும் வந்துள்ளது.
இதற்காக சிகிச்சைகள் பெற்ற நிலையிலும் தொடர்ந்து அவரது முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது. பலமுறை அகற்றியும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார்.
30 சென்டி மீட்டர் தாடி
அதோடு அதனையே சாதனையாக மாற்றுவதற்கும் முடிவு செய்த அவருக்கு சுமார் 30 சென்டி மீட்டர் தாடி வளர்ந்தது. இதன் மூலம் அவர் இவ்வளவு நீளமான தாடி வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தார்.
இந்தநிலையில், அவருக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் 25.5 சென்டி மீட்டர் தாடி வளர்த்து இந்த சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்