முன்னாள் மைத்திரியின் சுற்றுப்பயணத்திற்கு செலவிடப்பட்ட மில்லியன் ரூபாய்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு (America) மேற்கொண்ட உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்காக 50 மில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (20) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்த சுற்றுப்பயணத்தில் 77 பேரை அழைத்துச் சென்றார்.
பாதுகாப்பு அதிகாரிகள்
இதில் அப்போதைய முதல் பெண்மணி உட்பட மொத்தம் ஒன்பது அமைச்சர்கள் அடங்கியிருந்தனர்.
அதிகாரப்பூர்வ குழுவில் 28 உறுப்பினர்கள், இரண்டு நெறிமுறை அதிகாரிகள், 13 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 28 ஊடக பணியாளர்களும் இருந்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் மொத்த செலவு 50.4 மில்லியன் ரூபாய்கள்.
மொத்த செலவு
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), இந்தியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக 72 உறுப்பினர்களை அழைத்துச் சென்றார். இதன் மொத்த செலவு 9.5 மில்லியன் ரூபாய்கள் ஆகும்.
அதிகாரப்பூர்வ குழுவில் 12 பேர் இருந்தனர் மேலும் 11 பேர் அதிகாரப்பூர்வ குழுவிலிருந்து தனித்தனியாக சென்றனர்.
ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஊடக பணியாளர்கள் இதில் அடங்கியிருந்தனர் இதனை தவிர, இரண்டு தனித்தனி பாதுகாப்புப் படைகள் ஆகியவை சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணிக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்றன அத்தோடு இது பல வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஒரு சில மட்டுமே” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 19 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்