நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரித் திருத்தம் : அநுர வெளியிட்ட வர்த்தமானி

Anura Kumara Dissanayaka Sri Lanka Cabinet Sri Lankan Peoples Income Tax Department
By Sathangani Feb 27, 2026 07:21 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையின் வரி கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதியமைச்சர் அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி இதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இந்தசட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே இவை நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உள்நாட்டு இறைவரி ஆணையாளர்

அத்தோடு, காணி, கட்டடங்கள் அல்லது பங்குகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் இலாபத்திற்காக செலுத்தப்படும் வரி அதிகரிக்கப்படவுள்ளதுடன் தனிநபர்கள் மற்றும் பங்காளர் வணிகங்களுக்கு தற்போதுள்ள 10 சதவீத வரி  15 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.

அறக்கட்டளைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தற்போதுள்ள 10 சதவீத வரி பாரிய அளவில் 30 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது.

நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரித் திருத்தம் : அநுர வெளியிட்ட வர்த்தமானி | New Tax Reform Changes In Srilanka S Tax Structure

நிலுவை வரிகளுக்கான ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் நிவாரணம் வரி செலுத்துவதில் தாமதம் அல்லது நிலுவை வைத்துள்ளவர்களுக்கு ஒரு விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 மார்ச் 31 ஆம் திகதி வரை திரட்டப்பட்ட வட்டித் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்து 6 மாத காலப்பகுதிக்குள், அசல் வரித் தொகை மற்றும் அபராதங்களை முழுமையாகச் செலுத்த வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் : வெளியான அறிவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் : வெளியான அறிவிப்பு

புதிய சட்டத்தின் கீழ் 

2026 ஏப்ரல் 1 முதல், மதிப்பிடப்பட்ட வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் முறை நீக்கப்படும். அதற்குப் பதிலாக, முந்தைய ஆண்டின் வருமானத்தின் அடிப்படையில் தவணை முறையில் வரி செலுத்த முடியும்.

ஒரு தனிநபர் தனது முந்தைய ஆண்டு வருமானத்தில் 120 சதவீதத்திற்கும் அதிகமாக வரி செலுத்தி, எவ்வித மீளப்பெறலையும் கோராமல் சத்தியக்கடதாசி சமர்ப்பித்தால், அவரது வரி அறிக்கைகள் மேலதிக விசாரணையின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரித் திருத்தம் : அநுர வெளியிட்ட வர்த்தமானி | New Tax Reform Changes In Srilanka S Tax Structure

5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரி விரிவாக்கம் புதிய சட்டத்தின் கீழ் மேலதிகமான பல சேவை வழங்குநர்கள் 5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரிக்குள் உள்வாங்கப்படவுள்ளனர்.

கணக்காய்வாளர்கள், மதிப்பீட்டாளர்கள், தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், அழகுக்கலை நிபுணர்கள், சமூக ஊடக நிபுணர்கள் மற்றும் கடன் வசூலிப்போர் உள்ளிட்ட பல துறையினர் இதில் அடங்குவர்.

இதன் மூலம் இவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போதே, அதில் 5 சதவீதம் கழிக்கப்பட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்படும்.

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025