உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
2026 ஆம் ஆண்டு உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் (WAIC) உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மற்றும் ஸ்மார்ட் சவாரி செய்யும் நான்கு கால் வாகனம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நவீன ரோபோ குதிரை சுமார் 30 கிலோ எடையும், அரை மீட்டர் உயரமும் கொண்டது.
உலகின் முதல் கனரக ரோபோ
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் செல்லும் குறித்த ரோபோ குதிரை, 75 கிலோ வரை சுமக்கும் திறன் கொண்டது.

ஒருமுறை மின்னேற்றினால் 20 கி.மீ. வரை பயணிக்க முடியுயும் என்றும் இதனால் 25 டிகிரி சரிவுகளிலும் ஏறக்கூடியது எனவும் இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பல்வேறு நிலப்பரப்புகளில் இயங்கி, தடைகளைத் தவிர்த்து, உடல் வடிவத்தை மாற்றி, குரல்வழி தொடர்பும் கொள்ளும் திறனையும் இது கொண்டுள்ளது.
முற்றிலும் நான்கு கால் உயிரியக்கவியல் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த ரோபோ, செங்குத்தான சரிவுகள், சரளை மற்றும் சேறு உள்ளிட்ட சிக்கலான நிலப்பரப்புகளிலும் பயணிக்ககூடியவை என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
Who needs a horse when you can ride a robot? Kepler Robotics' Mechanical Qilin, a 300 kg heavy-duty quadruped, stole the show as a visitor took it for a spin at the WAIC 2026. Capable of hauling nearly one ton and running for eight hours straight, this rideable beast handles… pic.twitter.com/Bg0Su5Z89s
— Smart Industry in China (@SmartindustryCN) July 20, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்