உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரித்தானிய இராணுவம் உருவாக்கியுள்ள லேசர் ஆயுதம் !
ஒரு கிலோ மீட்டரிற்கு அப்பால் தனது கண்ணில் படும் இலக்குகளை எல்லாம் சாம்பலாக்கும் லேசர் ஆயுதத்தை பிரித்தானியா கண்டுபிடித்து தனது ராணுவத்தின் அங்கமாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் அவற்றின் பயன்பாட்டுக்கான சோதனைகள் அதிகமாகி வருகிறது, ரஷ்யாவும் அதற்கு எதிரான மேற்கு நாடுகளுமாக தங்களது புதிய ஆயுத ரகங்களை, எதிரெதிரே நின்று உக்ரைனில் சோதித்து வருகின்றன.
அந்த வகையில் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களை வீழ்த்துவது உக்ரைனுக்கு பெரும் சவாலாகி வருகிறது. உக்ரைனை அனைத்திலும் அரவணைத்து வரும் மேற்கு நாடுகள், ட்ரோன்களுக்கு எதிரான ஆயுதங்களை தயாரிப்பதில் முன்னேறி வருகின்றன.
முதல் லேசர் ஆயுதம்
அந்த வகையில் பிரித்தானியா தனது முதல் லேசர் ஆயுதத்தை ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்ப்பது குறித்து பகிரங்க அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்நுட்ப ஆதரவுடன் பிரிட்டன் தயாரித்திருக்கும் இந்த லேசர் ஆயுதங்கள் குறைந்த செலவில், அதிக சேதத்தை உருவாக்குபவை என தெரிவிக்கப்படுகின்றன.
லேசர் நுட்பமும் அவற்றின் பயன்பாடும் தலைமுறைக்கு முந்தையவை என்றபோதும், பிரிட்டன் படைத்துள்ள ட்ராகன் ஃபயர் ஆயுதம் புதுவிதமானதாக பார்க்கப்படுகிறது.
எதிரிகளின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை குறிவைத்து தாக்குதவதில் லேசர் ஆயுதங்களின் செயற்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. ’ட்ராகன் ஃபயர்’ என்ற பெயரிலான இந்த லேசர் ஆயுதத்தை 10 நிமிடங்கள் சுடுவதற்கு பயன்படுத்துவது என்பது, நீர் வெப்பமேற்றியை ஒரு மணி நேரம் பயன்படுத்துவதற்கு இணையான செலவை மட்டுமே உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
ஒற்றை நாணயம்
இது போர் ஆயுதங்கள் தயாரிப்பில் பெருமளவு செலவு ஏற்படுவதை குறைப்பதாகவும், குறிப்பிட்ட இலக்கை மட்டுமே அழிப்பதன் மூலம், அதிகளவு சேதத்தை தடுப்பதிலும் லேசர் ஆயுதங்கள் சிறப்பு வாய்ந்ததாக விளங்குவதாக கூறப்படுகிறது.
DragonFire ? is a new laser being developer by @dstlmod for the ?? military.
— Ministry of Defence ?? (@DefenceHQ) March 11, 2024
Watch its first high-power firing against an aerial target.
???https://t.co/D5sqIciICS pic.twitter.com/oI1xG9sK87
பிரிதானியாவின் பாதுகாப்பு அமைச்சு லேசர் ஆயுதத்தின் அதிகபட்ச வரம்பு குறித்து மௌனம் காத்து வருவதாகவும், ராணுவத்தின் தரப்பில் "லேசர் ஆயுதம் தனது கண்ணில் படும் எந்தவொரு இலக்கையும் எளிதில் அழிக்கும் சக்தி வாய்ந்தது" என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த ஒற்றை நாணயத்தை மட்டுமே குறிவைத்து தாக்குமளவுக்கு லேசர் ஆயுதம் இருப்பதாக அதன் செம்மை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.