மரணத்தை வென்றவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் - ஆனால், அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா...!
ஏழு முறை மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய குரோவேஷிய நாட்டவரான ஃபிரானோ செலக் (Frano Selak) என்பவருக்கு லொட்டரி மூலம் 600,000 பவுண்டுகள் பரிசு விழுந்திருக்கிறது.
சங்கீத ஆசிரியரான இவர், தனது ஐந்தாவது திருமண நாளில் அதிர்ஷ்டலாபச் சீட்டு ஒன்றை வாங்கிய நிலையில், மிகப்பெரிய ஜாக்பொட்டை வென்றிருக்கிறார்.
ஏழு முறை மரணத்தை வென்றவர்
(Image: ©EuroPics)
1962ஆம் ஆண்டு, அவர் பயணம் செய்துகொண்டிருந்த ரயில், பனி உறைந்த ஆறு ஒன்றிற்குள் பாய்ந்தது. அதில் பயணித்த 17 பேர் உயிரிழந்தார்கள். ஆனால், செலக் பிழைத்துக்கொண்டார்.
1963ஆம் ஆண்டு, ஒரு விமானத்திலிருந்து தூக்கி வீசப்பட்டும், 1966இல் ஒரு பேருந்து விபத்தில் சிக்கியும், 1970இல் தீப்பற்றிய கார்களிலிருந்தும், 1973இல் மற்றொரு பேருந்து விபத்திலிருந்தும், 1966இல், 300 அடி உயர மலையுச்சியிலிருந்து அவரது கார் உருண்டும், இப்படி ஏழு முறை மரணத்தை ருசிபார்த்தும் பிழைத்துக்கொண்டார் தான் செலக்.
இப்படி பலமுறை மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய இவருக்கு லொட்டரி மூலம் அதிர்ஷ்டம் அடித்தால் அவர் என்ன செய்வார்?
லொட்டரி மூலம் அதிர்ஷ்டம்
(Image: ©EuroPics)
இவர் 2005ஆம் ஆண்டு, தனது ஐந்தாவது திருமணத்தைக் கொண்டாடுவதற்காக லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்.
அந்த லொட்டரிச்சீட்டில் அவருக்கு 600,000 பவுண்டுகள் பரிசு விழுந்தது. ஆனால், அவர் என்ன சொன்னார் தெரியுமா? பணத்தால் மகிழ்ச்சியை வாங்கமுடியாது என்றார் அவர்.
ஆக, தனது பணத்தில் பெரும்பான்மையையும், தனது ஆடம்பர வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தையும், தன் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் கொடுத்துவிட்டார். அது தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது இடுப்பெலும்பு மாற்று சிகிச்சைக்காகவும், தன் ஆருயிர் மனைவியுடன் செலவிடுவதற்காகவும், தன்னைக் காத்த கடவுளுக்கொரு ஆலயம் கட்டுவதற்காகவும் மட்டும் பணம் வைத்திருப்பதாக செலக் கூறியுள்ளார்.
என் மனைவி Katarina வந்த நேரம் என் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவந்த நேரம் என்று கூறும் செலக், அவள் மட்டுமே போதும், பணம் எதையும் மாற்றிவிடாது என்று கூறியுள்ளார்.
