உலகத் தமிழ் தொழிலதிபர்களின் மாநாடு - இரண்டாம் நாள் அமர்வுகள் நிறைவு (படங்கள்)
லண்டனில் இடம்பெற்றுவரும் தமிழ் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுனர்களின் பூகோள மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள், இன்றும் இரண்டு அமர்வுகளாக மிகவும் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது.
உலகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபல தமிழ் தொழிலதிபர்களின் வருகைகளுடனும், ஆசிச் செய்திகளுடனும் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன.
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பொருளாதார பலம் உலகளாவிய ரீதியில் முக்கியமான ஒரு சக்தியாக மாறியுள்ள நிலையில், அந்த வலுவை ஒரணியில் திரட்டும் நோக்கத்துக்குரிய முன்னெடுப்பில் றைஸ் அல்லது எழுமின் என்ற கருப்பொருளில் குறைடன் நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க, கனடா ஆகிய வடஅமெரிக்க நாடுகள் இந்தியா மலேசியா உட்பட 70 நாடுகளில் உள்ள தமிழ் தொழில் முனைவோர் மற்றும் தொழில்வல்லுனர்களும் தமிழகத்தின் சார்பான பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கெடுத்து வருகின்றனர்.
நேற்றைய முதலாம் நாள் நிகழ்வில் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் தமிழகத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரித்து உலகளாவிய ரீதியில் ஒரு முன்னணி பசுமைச்சங்கிலி தமிழர்களால் உருவாகப்படும் முன்னெடுப்புகள் உட்பட்ட சில முக்கியமாக திட்டங்கள் கலந்துரையாடல்களில் இடம்பெற்றிருந்தன.
இன்றைய இரண்டாம் நாள் அமர்விலும் தமிழக அமைச்சரின் உரையுடன் சில முக்கிய திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. நாளை இறுதிநாள் அமர்வுகள் கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.