நினைவேந்தலுக்கு தயாராகும் உலகத் தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்
உலகத் தமிழர் வரலாற்று மையம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சிப் படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரித்தானியாவின் (United Kingdom), ஒக்ஸ்போட்டில் (Oxford) அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் (OX 17 3QP) நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 28,29.30 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் உயிர்க்கொடை உத்தமர்களுக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் நிகழ்வுக்காக உலகத் தமிழர் வரலாற்று மையம், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்பன தயாராகிக் கொண்டிருக்கின்றன.
சர்வதேச ரீதியாக உள்ள தமிழ்ப் பேராளுமைகள் கலந்து சிறப்பிக்க இருக்கும் இந்நிகழ்வில் தாங்களும் கலந்துகொண்டு தமிழ் வாழ, தமிழினம் வாழ தொடர்ந்து பயணிப்போம் என நிகழ்வு ஒருங்கமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |