உலகில் சிறந்த உணவுகள் உள்ள நாடுகளின் பட்டியல் - முதல் ஐந்து இடத்திற்குள் இந்தியா!
உலகின் தலைசிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டேஸ்ட் அட்லஸ் எனும் தனியார் நிறுவனமே குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
டேஸ்ட் அட்லஸ் அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள உணவுகளின் சுவைகளை ஆராய்ந்து அது தொடர்பான மக்களின் கருத்துக்களை கேட்டு அதனடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
சிறந்த உணவுகள்
இந்த பட்டியலில் முதலாவது இடத்தை 4.72 புள்ளிகளுடன் இத்தாலிய உணவுகள் பெற்றுள்ளதுடன், கிரேக்கம் , ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உணவுகள் 2ம், 3ம், 4ம் இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய உணவுகளின் நிலை
குறித்த பட்டியலில் 4.54 புள்ளிகளை பெற்றுக்கொண்ட இந்தியாவின் உணவுகள் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பட்டர் கார்லிக் நான், கீமா, மற்றும் கரம் மசாலா கலந்த உணவுகள் சுவையான மற்றும் சிறந்த உணவுகள் இந்திய உணவுகளாக டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தலை சிறந்த உணவகங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள எந்த உணவகங்களும் முதல் 5 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
