உலகில் மாயமான பிரபல சுற்றுலா தளங்கள் பற்றி தெரியுமா...
ஒரு காலத்தில் முக்கிய சுற்றுலா தளங்களாக திகழ்ந்த பல இயற்கை அதிசயங்கள், பூமியை விட்டு மறைந்து போயுள்ளன.
அவ்வாறான இடங்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆசூர் வின்டோ (AZURE WINDOW)
இந்த இடம் மோல்டாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சமாக இருந்தது.
ஆனால் மாரச் 2017ஆம் ஆண்டு புயலினால் இடிந்து விழுந்துள்ளது.
த புட்டாஸ் ஒப் பாமியன் (THE BUDDHAS OF BAMIYAN)
6ஆம் நூற்றாண்டைச் சேரந்த குன்றில் செதுக்கப்பட்டிருக்கும் நிற்கும் புத்தர்களின் நினைவுச்சின்னங்கள் ஆகும்.
அவை 2001 இல் தலிபான்களால் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது.
வெட்டிங் கேக் ரொக் (WEDDING CAKE ROCK)
இந்த வெட்டிங் கேக் ரொக் , நியூ சவுத் வேல்சு பகுதியில் உள்ள ரோயல் தேசிய பூங்காவில் இருந்தது.
இதனை வைட் ரொக் எனவும் அழைத்து வந்தனர். ஆனால் 2015இல் ஏற்பட்ட இயற்கை அரிப்பால் இடிந்து விழுந்தது.
ட்ரோவின் ஆர்க் (DARWIN ARCH)
இயற்கையாகவே ஆர்க் வடிவமைப்பு கொண்ட இந்த பாறை கலாபகஸ் தீவுகளில் அமைந்திருந்தது.
இயற்கை அரிப்பு காரணமாக 2021இல் கடலில் விழுந்தது.
சுர்றோ பாத்ஸ் (SUTRO BATHS)
இது ஒரு காலத்தில் சான் பிரான்சிஸ்கோவில் கிளிஃப் ஹவுஸுக்கு அருகில் மிகப்பெரிய உப்பு நீர் நீச்சல் பகுதியாக இருந்தது.
1966 இல் ஏற்பட்ட தீ விபத்தில் சூட்ரோ பாத் சேதமடைந்தது.
த வோல் ஆர்க் (THE WALL ARCH)
இது ஆர்ச்சஸ் தேசிய பூங்காவில் இயற்கை மணற்கற்களால் உண்டான ஆர்க் ஆகும்.
ஆனால் 2008 இல் ஏற்பட்ட இயற்கை அரிப்பில் வோல் ஆர்க் இடிந்து போனது.
குவாரியா போல்ஸ் (GUAIRA FALLS)
1980 ஆம் ஆண்டில் பராகுவே மற்றும் பிரேசிலின் எல்லையான பரானா ஆற்றின் மீது itaipu அணை கட்டப்பட்ட போது அங்கிருந்து GUAIRA நீர்வீழ்ச்சி நீரில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.
ஜோனா ரொம்ப்ஸ் (JONAH'S TOMBS)
இது தீர்க்கதரிசி ஜோனா அடக்கம் செய்யப்பட்ட இடமாக நம்பப்படுகின்றது.
ஆனால் 2014 இல் நடந்த போராட்டத்தின் போது ஐ.எஸ் ஐ.எஸ் குழுவினரால் அப்பகுதி இடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |