சுற்றுலா செல்ல சிறந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது தெரியுமா..! தரவரிசை வெளியீடு
Sri Lanka Tourism
Tourism
Tourist Visa
By pavan
சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை சுற்றுலா சம்மந்தப்பட்ட இதழ் வருடா வருடம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கு உலக அளவில் சிறந்த 20 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் இலங்கை 17-வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் இலங்கை இந்த ஆண்டு 88.01 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு இலங்கை இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
பொருளாதாரத்தில் மீளும் முயற்சி
இந்நிலையில், சுற்றுலாவை பிரதான வருவாய் ஆதாரமாக கொண்ட இலங்கை, பொருளாதாரத்தில் மீளும் முயற்சியாக மீண்டும் சுற்றுலா துறைக்கு புத்துயிரூட்ட முயன்றுவருவது குறிப்பிட்டத்தக்கது.
அதேவேளை, இந்த ஆண்டு சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் 3 இடங்களை போர்த்துக்கல், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி