விற்பனையான மாட்டிறைச்சியில் புழு - முள்ளியவளையில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட முள்ளியவளை பொதுச் சந்தையில் இன்று விற்பனையான மாட்டிறைச்சியில் புழு காணப்பட்டுள்ளது.
இன்று முள்ளியவளை சந்தையில் இறைச்சி விற்பனை முடியும் தறுவாயில் இறைச்சி வாங்கிய ஒருவரே இவ்வாறு இறைச்சியில் புழு உள்ளதை இனங்கண்டுள்ளர்.
இந்நிலையில் குறித்த நபர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்டவர்களுக்கு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் குறித்த வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அனுமதிகளை மீறி அதிகளவான மாடுகள் கொல்லப்பட்டு சந்தைகளில் இறைச்சிகள் விற்ப்பனையாகின்றமையே இதற்கு காரணம் என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீர் ஊற்று சந்தையிலும் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


