கைது செய்வதை இடைநிறுத்த கோரி தேசபந்து தென்னகோன் ரிட் மனு தாக்கல்
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்ய மாத்தறை(matara) நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்த இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (deshabandu tennakoon)தனது வழக்கறிஞர்கள் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் முகமது லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.
நீதிபதிகள் எடுத்த முடிவு
பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், மனுவை 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இதேவேளை மாத்தறை நீதிமன்றம் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளார். இன்றுவரை அவர் எங்குள்ளார் என்பது புரியாத புதிராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்