சீனாவில் உலகப் போர் குண்டு: அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்
சீனாவில் (China) இரண்டாம் உலகப் போரின் மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த குண்டு சீனாவின் ஹாங் காங் (Hong Kong) மாகாணத்தில் நேற்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குவாரி பே (Quarry Bay) பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அமெரிக்க குண்டு
இதன்போது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும் மற்றும் 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகாரிகள்
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,"இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.
இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
