எக்ஸ்-பிரஸ் பெர்ல் இழப்பீடு ராஜபக்ச வங்கி கணக்குகளில்!
Sri Lanka Economic Crisis
Rajapaksa Family
Singapore
By Vanan
கொழும்பு கடற்பரப்பில் எரிந்த நிலையில் மூழ்கிய X-press perl கப்பல் விபத்து இழப்பீட்டை ராஜபக்சக்கள் பயன்படுத்திக் கொண்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
இணைய சேவை ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த நயனக ரன்வெல்ல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு பணம் வரவில்லை என்றாலும் மில்லியன் கணக்கான டொலர்கள் அவர்களது கணக்குகளில் போடப்பட்டதாக அவர் கூறுகிறார்.
சிங்கப்பூரில் வழக்கு தாக்கல்
ஒப்பந்தங்களை மறைக்க உதவிய மூன்று பேருக்கு கப்பல் நிறுவனத்தினால் டுபாயில் வீடுகள் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த கப்பல் விபத்து தொடர்பாக இலங்கையில் ஆதாரங்கள் இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்தால் வழக்கு நிராகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்