இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீன அதிபரின் விசேட தூதுவர்!
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும் அரச சபை உறுப்பினருமான ஷென் யிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அறிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நவம்பர் 18 முதல் 21 வரை 3 நாள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மாலைதீவு சென்றுள்ளதாக
இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னர் நவம்பர் 15 முதல் 18 வரையான மூன்று நாட்களும் மாலைதீவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் (17) மலேயில் இடம்பெறவுள்ள மாலைதீவு அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் மாலைதீவு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மாலைதீவு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஹமட் முய்ஸுவின் அழைப்பின் பேரில் ஷென் தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் மாவோ கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |