ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் புலிகளின் வீரம் செறிந்த குடாரப்பு தரையிறக்கம் பற்றிய நாவல்
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் எழுதியுள்ள 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு நாவல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வரலாற்றின் பெரு நினைவாகவும் தமிழர் போரியல் மரபின் அடையாளமாகவும் திகழும் குடாரப்பு தரையிறக்கம் குறித்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கலந்து கொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினர்களாக மகாதேவா ஆச்சிரம நிலையத்தின் தலைவர் சி. மோகனபவன், இலங்கை குமரித் தமிழ்ப் பணி மன்றத்தின் தலைவர் நா. வை. மகேந்திரராசா, கே எஸ் ஆர் மற்றும் பண்டிதர் பரந்தாமன் கலைக் கல்லூரி ஆகியவற்றின் இயக்குனர் கே. செளந்தரராஜன் மற்றும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபர் சின்னப்பா நாகேந்திரராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வில் வெளியீட்டு உரையினை கரைச்சிப் பிரதேசசபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் நிகழ்த்தவுள்ளதோடு விமர்சன உரையினை ஆசிரியர் ஆறுமுகம் இராஜேந்திரகுமாரும் (காண்டீபன்), உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைக்கான தலைவர் திரு அருணாசலம் சத்தியானந்தனும் நிகழ்த்த உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |