இளம் தம்பதி சூட்டு காயங்களுடன் சடலங்களாக மீட்பு
Nuwara Eliya
Shooting
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
திருமணம் முடித்து எட்டு மாதங்களே ஆன நிலையில் இளம்குடும்பமான கணவன் மற்றும் மனைவி வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கண்டி பிராதன வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் திங்கட்கிழமை (07) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருமணமாகி எட்டே மாதங்களான தம்பதி

இந்த சம்பவத்தில் திருமணமாகி எட்டே மாதங்களே ஆன எண்டன் தாஸ் (வயது 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது 32) ஆகியோரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவர்களாவர்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து கணவன் மனைவியை சுட்டுக் கொலைசெய்த பின்னர் கணவன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி