கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இளம் தம்பதியினர் - தீவிரமடையும் விசாரணை
குருநாகல் - நாரம்மலை பகுதியில் இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் அவர்களது வீட்டின் அறையொன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 29 வயதுடைய வசந்த, 27 வயதுடைய ரோஹிணி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
படுகொலை
குருநாகல் - மல்லவபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி நாரம்மலை பிரதேசத்திலுள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.
நேற்றுப் பிற்பகல் அந்த வீட்டிலிருந்து அவர்கள், கழுத்திலும் உடலிலும் பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டின் அறை இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணை
இருவரும் வன்முறைக் குழுவொன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிவானின் உத்தரவுக்கமைய சடலங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.
