இளம் யுவதி மர்மமான முறையில் படுகொலை - கதறும் பெற்றோர்
இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரத்னபுர, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் யுவதி இன்று காலை 6.30 மணியளவில் தனது பணியிடத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சடலம்
சசினி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அவரது சடலம் வீட்டுக்கு அருகில் இருந்த கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரி
உயிரிழந்த சசினி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி என்பதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார்.
இரத்தினபுரி பதில் நீதவான் சுமித் ஆனந்தவினால் மரணம் தொடர்பான இடப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது கொலையாக இருக்கலாம் எனவும் கொலைக்கு முன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இரத்தினபுரி மற்றும் அலபாத்த காவல் நிலையங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
