இளம் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை: வைத்தியருக்கு மரண தண்டனை

Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Kiruththikan Jun 15, 2022 10:56 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத  இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிகிச்சைக்காக வந்த பெண்ணை தனது அறைக்குள் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, ஆறாவது மாடியில் ஜன்னல் ஒன்றின் ஊடாக கீழே தள்ளி கொலை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளியான மருத்துவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பை உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் 

இளம் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை: வைத்தியருக்கு மரண தண்டனை | Young Girl Raped Murdered Doctor Sentenced Death

மரண தண்டனையும் 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பன நியாயமான மற்றும் சட்டத்திற்கு அமைய நீதியான தீர்ப்பு என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி நீர்கொழும்பு ஆதர வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் சேவையாற்றிய மருத்துவர், யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

குற்றவாளியான மருத்துவர், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை உட்படுத்தி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சம்பத் அபேகோன், பீ.குமாரரத்னம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

குறித்த யுவதி கொலை செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் குற்றவாளியின் அறையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

அத்துடன் யுவதியின் மரணம் சம்பவிக்கும் நேரத்தில் அவர் உள்ளாடையுடன் இருந்தார் எனவும் அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நிரூபிக்கும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இளம் யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை: வைத்தியருக்கு மரண தண்டனை | Young Girl Raped Murdered Doctor Sentenced Death

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023