யாழ். அரியாலையில் துயர சம்பவம் - உறக்கத்திலேயே இளம் குடும்பப் பெண் மரணம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சாப்பிட்டுவிட்டு உறங்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் நேற்று (1.1.2025) யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதனா வைத்தியசாலை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்று (01.01.2025) காலை 9 மணியளவில் உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.
பின்னர் குறித்த பெண்ணின் தாயார் மதிய உணவுக்காக அவரை எழுப்பியவேளை அசைவற்று காணப்பட்டார்.
இந்நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
[9IS879 ]
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இதனையடுத்து, சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |