பொது இடத்தில் நடனமாடிய இளம் ஜோடிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பொது இடத்தில் நடனமாடும் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவேற்றியதற்காக ஈரானிய இளம் காதலர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 மற்றும் 22 வயதுடைய குறித்த இருவரும் ஈரானின் தெஹ்ரானில் உள்ள சுதந்திர கோபுரத்தின் முன் நடனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழல் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
Iranian couple who danced in public have been sentenced to a 10-year prison sentence.
— Tarek Fatah (@TarekFatah) January 31, 2023
Under Islamic law in Iran, men and women are prohibited from displaying joy, holding hands or simply showing affection for each other. Joy is a sin according to Sharia https://t.co/r7nmfOnmsX
குறித்த குற்றச்செயலுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக சதி நடந்துள்ளதாகவும் தீர்ப்பளித்திருந்தது.
தண்டனைக்கு கூடுதலாக, தம்பதியினர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு ஆண்டுகளுக்கு சமூக ஊடகத் தடையுடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய சட்டத்தின்படி பெண்கள் பொது இடங்களில் நடனமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும், நடனமாடும் போது தலையை மறைக்கவில்லை எனவும் அந்த பெண்ணின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.