யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்
Sri Lanka Police
Jaffna
Death
By Theepan
யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாருஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போனார்
கடல்நீரேரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போனார். அதனை அவதானித்தவர்கள் கடல்நீரேரியில் இறங்கி இளைஞனை தேடிய நிலையில், இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |