முல்லைத்தீவில் யானை தாக்கி இளைஞன் பலி
முல்லைத்தீவில் வயல் காவலில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் யானைதாக்கியதில் பலியான சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த காவல் கொட்டிலில் மூவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்தவேளை காவல் தொட்டிலை யானைதாக்கி சேதப்படுத்தியதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் இருவர் காவல் கொட்டிலை விட்டு தப்பி ஓடிய நிலையில் இளைஞர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
19 அகவையுடைய தேறாங்கண்டல் பகுதியினை சேர்ந்த பொன்முடி சுயீவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று கிராமசேவையாளர் மற்றும் காவல்துறையினர் உடலத்தினை மீட்டு மல்லாவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |