யாழ்ப்பாணத்தில் படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
Sri Lanka Police
Jaffna
Death
By Thulsi
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்குப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நான்கு வெவ்வேறு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் யாழ். அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
அளவெட்டி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |