திருகோணமலை கடற்கரையில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
புதிய இணைப்பு
கடந்த 30 ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் நீராடுவதற்கு சென்று காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் இன்று (01) காலை மீட்கப்பட்டது.
நான்கு நண்பர்கள் திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்றிருந்த நிலையில் ஒருவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவரை காப்பாற்ற ஏனையோர் முயன்ற நிலையில் அவரை காப்பாற்ற முடியாது போனதுடன் பின்னர் அனைவரையும் காவல்துறை உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவ்வாறு காணாமல் போயிருந்த திருகோணமலை சீனக்குடா பகுதியினை சேர்ந்த 20வயது இளைஞ்ஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன இளைஞரை தேடும் பணிகள் கடற்படையின் உதவியுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதுடன் இன்று காலை குறித்த சடலம் கடலில் அடையாளம் காணப்பட்டு கரைக்கு எடுத்துவரப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
திருகோணமலை(trincomale) நகர் கடற்கரையில் இன்று(30) மாலை நீராடச்சென்றிருந்த நிலையில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் திருகோணமலை சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20வயது இளைஞர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள்
நண்பர்கள் நால்வர் திருகோணமலை கடற்கரையில் நீராடச் சென்றிருந்த நிலையில் ஒருவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்ற ஏனையோர் முயன்ற நிலையில் அவரை காப்பாற்ற முடியாது போனதாகவும் பின்னர் அனைவரையும் காவல்துறை உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காணாமல் போன இளைஞரை தேடும் பணிகள் கடற்படையின் உதவியுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் போதிய வெளிச்சம் இன்மையால் தேடும் பணிகள் நாளை(31) காலை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
