காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம் : கொலை செய்யப்பட்டாரா..!
காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. காணாமல் போனவர் உணவுக் கடை நடத்தும் இளைஞன் என்பதுடன், குளியாப்பிட்டிய கபலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சுசித ஜயவன்ச என்பவரே கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ளார்.
தனது காதலியின் வீட்டிற்கு
இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாஉல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.
அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை, மேலும் சுசிதவின் கடை ஊழியருக்கு சுசிதா மறைவதற்கு முன்னர் சென்றதாகக் கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிகிதியிடம் இருந்தும் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
“செவ்வாய் இரவு 7:58 மணிக்கு சிகிதி என்ற நபர் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தார். அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன்.. இப்போது பரவாயில்லை.. கொன்று விட்டேன்.. வரமாட்டார் என்றார்.
காவல்துறையினர் விசாரணை
இவ்வாறு காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதாவின் நண்பர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான காரொன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |