யாழ். சர்வதேச விமான நிலையம் - அரச தரப்பு வெளியிட்ட அறிவிப்பு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”அரசாங்கம் என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்த தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம்.
அந்த வகையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம்.
விமான சேவைகளை விரிவுபடுத்தல்
கடந்த அரசாங்கத்தில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயற்படுத்தி வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
யாழ்ப்பாண விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |