உறவினருடன் குளிக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!
ஹட்டன் கினிகத்ஹேன- எபடின் அருவிக்கு கீழ் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 34 வயதான நுவன் ரசங்க பிரேமச்சந்திர என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞன் தமது வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் சிலருடன் அருவியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது இளைஞன் அருவிக்கு கீழே உள்ள தடாகத்திற்குள் குதித்து நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
பிரேதப் பரிசோதனை
இதனையடுத்து நீரில் மூழ்கிய இளைஞனை மீட்க பிரதேசவாசிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இளைஞன் நீருக்குள் இருந்து மீட்கப்படும் போது உயிரிழந்து காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைகளுக்காக உடல் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்ஹேன காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.