சிறு வயதில் செய்ததிருட்டு தண்டனை அளிக்ககோரி காவல்துறையில் சரணடைந்த பிக்கு
தாம் சிறுவனாக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையிடம் பிடிபடவில்லை எனவும், தம்மை கைது செய்யும் வரை தமக்கு அமைதி ஏற்படப் போவதில்லை எனவும் எனவே தம்மை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி தண்டனை அளிக்குமாறு கோரி இளம் பிக்கு ஒருவர் கம்பகா யக்கல காவல்நிலையத்திற்கு இன்று (4) வந்ததாக யக்கல காவல்துறையினர் தெரிவித்தனர்
இந்த துறவி தனது தாயுடன் காவல்துறைக்கு வந்தார். இதனையடுத்து காவல்துறையினர் பிக்குவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சாமானியனாக இருந்த போது செய்த திருட்டு
எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் சாமானியனாக இருந்த போது செய்த இந்த திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை தமக்கு நிம்மதி இல்லை என இந்த பிக்கு கூறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருட்டுகளுக்கு தண்டனை பெற்று மன அமைதி பெற
ஒரு சாமானியனாக தாம் செய்த இந்த திருட்டுகளால் தான் அடிக்கடி வேதனைப்படுவதாகவும், அந்த திருட்டுகளுக்கு தண்டனை பெற்று மன அமைதி பெற வேண்டும் என்பதாலேயே காவல்துறையில் சரணடைய முடிவு செய்ததாகவும் பிக்கு காவல்துறையிடம் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |