சீனாவில் தங்கத்தை வாங்கி குவிக்கும் இளைஞர்கள்
China
Gold
By Sumithiran
சீனாவில் தங்கத்தை வாங்குவதில் இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக செளத் சீனா மோனிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அத்துடன் வசதி குறைவான மக்களும், 3 மற்றும் 4-ம் கட்ட நகரங்களிலும் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது.
இதனால் சீனாவில் தங்கத்தின் விலை கடந்த ஆண்டு புதிய உச்சத்தை தொட்டது.
சீனாவில் தங்கத்தின் மீதான ஆர்வம்
2023-ல் உலகளவில் தங்கத்துக்கான விற்பனையில் சீனாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
உலகளவில் ஒட்டுமொத்த தங்கத்துக்கான தேவை 5 சதவிகிதம் குறைந்த நிலையில் சீனாவில் மட்டும் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தங்கத்துக்கான உலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்