உணர்ச்சிகளை தூண்டும் மாத்திரைப் பயன்பாடு..! விடுதி அறைகளில் உயிரிழக்கும் இளைஞர்கள்
உயிரிழப்பு
உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென உயிரிழக்கும் இந்த இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட பல பிரேதப் பரிசோதனைகளில், அவர்கள் தமது துணையுடன் இருக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக உணர்ச்சியை தூண்டும் மருந்துகளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக கொழும்பு நகர மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மருத்துவ ஆலோசனையின்றி உணர்வுகளை தூண்டும் பல்வேறு வகையான மருந்துகளை பயன்படுத்த பழகிக்கொண்டுள்ளனர்.
மாதாந்தம் ஐந்து இளைஞர்கள்
இவ்வாறு பல வகையான மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி பயன்படுத்துவதன் காரணமாக கொழும்பு நகரில் மாதாந்தம் ஐந்து இளைஞர்கள் இறப்பதாக மரண விசாரணை நீதிமன்ற அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இவ்வாறான உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்த வேண்டுமாயின் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது கட்டாயம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.