கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் மனைவி - கணவன் தப்பியோட்டம்
Sri Lanka Police
Sri Lanka
Crime
Death
By pavan
ஹக்மன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வங்கி முகாமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.
மேலதிக விசாரணை
சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹக்மன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி