கோர விபத்தில் இளம் யுவதி பரிதாபப் பலி
கோர வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று மாலை கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேருக்கு நேர் மோதி விபத்து
அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், ஹயஸ் ரக வாகனத்தின் சாரதியான 24 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |