முகநூல் ஊடாக தகாத முறைக்கு உள்ளாக்கப்பட்ட 06 யுவதிகள்!
முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் ஆறு யுவதிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக காவல்துறை, சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் திங்கட்கிழமை (01) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முறைப்பாடுகள்
தகாத முறைக்கு ஆளான யுவதிகள் தனித்தனியாக முன்வைத்த 06 முறைப்பாடுகளை காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் சாமந்தி ரேணுகா கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.
மாத்தறை, தெனிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய பெண் ஒருவர் முகநூலில் போலி கணக்கை உருவாக்கி தன்னை தகாத முறைக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை முகநூல் கணக்கில் வெளியிட்டு தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக மற்றுமொரு முறைப்பாட்டை பலபோவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலதிக விசாரணை
இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னை அவமதிக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை விடுத்து தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக தந்துரே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |