குழந்தைகளின் இணையத்தளப் பாவனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குழந்தைகள் விளையாடும் நிகழ்நிலை விளையாட்டுக்களில் குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை மற்றும் தவறான காட்சிகள் உள்ளதாகவும் பெற்றோர் எச்சரிக்கையாக செயற்பட வேண்டுமெனவும் கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒன்லைன் விளையாட்டுக்கள், டிக் டொக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டும் குழந்தைகள் தமது ஞாபக சக்தியை இழக்கிறார்கள்.
நிகழ்நிலை விளையாட்டு
அதேவேளை இவ்வாறான ஒன்லைன் விளையாட்டுக்களுக்காக குழந்தைகள் பெருமளவில் பணத்தை செலவிடுகின்றனர்.
அத்துடன் இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்ட வேண்டாம் என அமெரிக்க உளவியல் சங்கம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசியை காட்டி உணவளிக்கும் பெற்றோர் அதனை உடனே நிறுத்த வேண்டும்” என சரண்யா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |