தமிழர் பகுதியில் இளைஞனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்
Ampara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
அம்பாறை(Ampara) - அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அகத்திக்குளம் பகுதியில் நேற்று(22.03.2025) இடம்பெற்றுள்ளது.
கண்ணகி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்த அவர் அதன் கலப்பை பகுதியில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உழவு இயந்திரத்தின் சாரதியாகச் செயற்பட்ட நபர் அக்கரைப்பற்று காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி