உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல் : கேள்விக்குறியாகும் அமைதிப் பேச்சுவார்த்தை
உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) நடத்திய ட்ரோன் தாக்குதலில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனிய நகரமாக ஜபோரிஷ்யாவில் நேற்று இரவு (22.03.2025) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் நடந்த தாக்குதல்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
மேலும், ஜாபோரிஷ்யா மீது 10 முறை தாக்குதல் நடந்ததகவும், இதில் 14 வயது சிறுமியும் அவளது பெற்றோரும் உயிரிழந்துள்ளனர் என்றும் மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் என அந்நகரின் ஆளுநர் இவான் பெட்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும் வடகிழக்கில் உள்ள சுமி (Sumy) பகுதியில் உள்ள கிராமத்தில் ரஷியா குறைந்தது 6 குண்டுகளை வீசியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் கிழக்கில் உள்ள டோன்ட்ஸ்க் (Donetsk) பகுதியில் நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என்றும் 9 பேர் காயமடைந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
இதேவேளை,2022 முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பர டிரோன் தாக்குதல் நடத்தி வருவது நிலைமையை மோசமாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 4 மணி நேரம் முன்
