கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை!
Srilanka
Suspect
Personal dispute
Youth killed
sharp weapon
undercover
By MKkamshan
தலங்கம வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாலபே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாலபே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (31) மாலை இருவருக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றிய நிலையில், சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாலபே காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
