மட்டக்களப்பில் கடுகதி தொடருந்தில் மோதி இளைஞன் பலி!
Batticaloa
Colombo
Sri Lanka
By Laksi
மட்டக்களப்பில் - புலதுசி கடுகதி தொடருந்தில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
புலதுசி கடுகதி தொடருந்தில் மோதி விபத்து
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று (25.02.2024) மட்டக்களப்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்த புலதுசி கடுகதி தொடருந்தில், இரவு 10.20 மணியளவில் மட்டக்களப்பு, திராய்மடுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளது.
இதன்போது கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி