யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna
By Theepan Feb 03, 2026 05:56 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருகின்றது.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனிடம் தொடர்புகொண்டு கேட்ட போது,

 இராணுவத்தினர் விவசாயம் செய்ய பனைமரங்கள் அழிப்பு

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளில் 15 கிராம சேவையாளர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். அந்த நிலையில் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுக்கப்பட்டுள்ள நிலையில் , மற்றைய பகுதி விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த நிலங்களில் இராணுவத்தினர் தோட்டங்களை செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் | Palm Trees Being Destroyed By Military In Jaffna

இந்த நிலையில் விமான நிலையத்திற்கு மேற்கு பக்கம் உள்ள பகுதியில் பெருமளவான பனை மரங்கள் இன்றைய தினம் (03)செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டு , இராணுவத்தினர் தாம் விவசாயம் செய்வதற்காக அந்த நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர்

பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள் தமது காணிகளில் உள்ள பனை மரங்களை அனுமதியின்றி தறித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டங்கள் அறவிடப்படும் நிலையில் , இராணுவத்தினரால் பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தடுத்து நிறுத்தி பனை வளங்களை பாதுகாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் | Palm Trees Being Destroyed By Military In Jaffna

பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக மாவட்ட செயலர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சி மாற்றங்கள் ஊடாக தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் நம்பி தேசிய மக்கள் சக்தியினருக்கு வாக்களித்தனர். அதனாலயே அவர்களில் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள்

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்கள்

ஜனாதிபதி தைப்பொங்கல் நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த போது காணிகள் விடுவிக்கப்படும் , வீதிகள் திறக்கப்படும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் முகமாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது சென்றார்

யாழ்ப்பாணம் வலிவடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் | Palm Trees Being Destroyed By Military In Jaffna

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் , கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் , காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் , விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான வரைபடங்களை தாம் தயாரித்து வருவதாகவும் இராணுவத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் , தற்போது தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை அழித்து வருகின்றனர்.

எனவே மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க மாவட்ட செயலர் , பனை அபிவிருத்தி சங்க தலைவர் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து , பனை மரங்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார். 

யாழில் தனியார் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

யாழில் தனியார் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

யாழில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் மாயம்!

யாழில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் மாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023