யாழில் மீன்பிடிக்கச் சென்ற கடற்றொழிலாளர் மாயம்!
Jaffna
Sri Lanka Police Investigation
Sri Lanka Fisherman
By Theepan
யாழ்ப்பாணம் - குருநகர் இறங்குதுறை கடற்றொழிலாளர்களின் விசைப்படகில் இருந்து காரநகர் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன கடற்றொழிலாளர் ஊர்காவல்துறை பருத்தி அடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் தேடுதல்
நேற்று மாலை இவர்கள் மீன்பிடிக்க சென்ற பொழுது பின் அணியத்திலிருந்து கடற்றொழிலாளர் கடலில் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், காணாமல் போன கடற்றொழிலாளரை தேடும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 9 மணி நேரம் முன்
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி