இரண்டு டெனிம் நீள காற்சட்டைகளை திருடிய இளைஞனுக்கு கடூழிய சிறை
கடந்த 2017 இல் கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள புடவைக் கடையில் இருந்து ரூபா 40,000 பெறுமதியான இரண்டு டெனிம் ஜீன்ஸை திருடிய இளைஞருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்கள் இன்றி 06 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கை முடித்து வைத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (ஜூலை 10) இளைஞருக்கு இந்த சிறைத்தண்டனையை விதித்தது.
ஆறு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்

கடந்த ஜனவரி 2017 இல் கொழும்பு 08 ஐ வசிப்பிடமாகக் கொண்ட சந்தேகநபர், தலா 19,900 பெறுமதியான இரண்டு டெனிம் ஜீன்ஸ்களை திருடியுள்ளார்.
ஆரம்பத்தில், கறுவாத்தோட்டம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சந்தேக நபரைக் கைது செய்தனர், ஆனால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு வருட கடூழிய சிறை

எனினும், சுமார் 6 வருடங்களாக இந்த வழக்கை விசாரித்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், சந்தேக நபருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026