யூடியூப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - அறிமுகமாகும் புதிய அப்டேட்
யூடியுப் மியுசிக் (Youtube Music) செயலியில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த கலைஞர்களை தேர்வு செய்து புதிய பாடலை (album)உருவாக்கி கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை அறிவித்துள்ளது.
யூடியூப் தளத்தில் பொதுவாக எல்லா வகையான காணொளிகளையும் காண முடியும். அதன் பின்பு இசைக்கு மட்டுமே பிரத்யேகமாக யூடியூப் மீயூசிக் என்ற ஒரு செயலியை தொடங்கியது.
அதில் நாம் விரும்பிய இசைகளை கேட்குமாறு வசதி உருவாக்கப்பட்டிருந்தது.
பணம் செலுத்தாதவர்களும் பயன்படுத்தலாம்
தற்போது புதிதாக யூடியூப் மீயூசிக்கில் பயனாளிகள் தங்களுக்கு பிடித்த 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை தேர்வு செய்து அவர்களது பாடல்கள் மற்றும் இசையை நமது சுய பாடலாக மாற்றி விரும்பும் போது கேட்டுக்கொள்ளலாம் எனும் வசதியை உருவாக்கியுள்ளது.
"Your music tuner" என்ற தெரிவை கிளிக் செய்து நமக்கு பிடித்தமான இசைக்கலைஞர்களை தேர்வு செய்து அவர்களது பாடல்களை கேட்கலாம். மேலும், பயனர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்கள், இதுவரை கேட்டிராத பாடல்கள் அல்லது இரண்டினையும் சேர்த்து, திருத்தம் செய்து பயனர்கள் கலவையை வடிவமைத்து கேட்கலாம்.
இது பற்றி கூகுள் செய்தித் தொடர்பாளர் பால் பென்னிங்டனின் கூறியதாவது " இந்த செயலியை பணம் செலுத்தாதவர்களும் பயன்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மாத இறுதியில் இந்த புதிய அப்டேட் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
