நிறைவேறிய யூடியூபரின் கணிப்பு: கவலையில் முக்கிய அரசியல்வாதி
யூடியூபர் ஒருவரின் கணிப்பின் படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலையளிப்பதாக முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க நாட்டை மூன்று முக்கியமான நெருக்கடிகளின் போது நிலைநிறுத்தியதையும் அலி சப்ரி நினைவூட்டியுள்ளார்.
பழிவாங்கும் அரசியல்
அதாவது 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலைக்குப் பின், 2000 ஆம் ஆண்டு நாட்டின் முதல் மந்தநிலை காலத்தில், மேலும் 2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகளை சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யூடியூபர் ஒருவரின் கணிப்பின் படி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்பது கவலைக்குரியது.
இது பழிவாங்கும் மற்றும் அழிக்கும் அரசியலின் ஆபத்தான போக்கை காட்டுகிறது. இந்தச் சுழற்சி நிறுத்தப்பட வேண்டும். இலங்கைக்கு விவேகமும் நிலைத்தன்மையும் கொண்ட அரசியல் தேவை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
