சீனா எங்கள் நம்பகமான நண்பன் - யுவான் வாங் வரவேற்பில் புகழாரம்
சீனா இலங்கைக்கு தவிர்க்க முடியாத - நம்பகமான ஒரு நண்பன் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள யுவான் வாங் - 5 கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர்,
“அதிபர் சார்பாக யுவான் வாங்கின் மாலுமி உட்பட அனைவரையும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர சீனா உட்பட அனைத்து சர்வதேச நாடுகளினதும் ஒத்துழைப்பும் உதவியும் இலங்கைக்கு மிக அவசியமாகும்.
இலங்கைக்கான சர்வதேச உதவிகள்
இலங்கையின் கடன்களை மறுசீரமைக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை விரைவில் பெற்றுக் கொள்ள இலங்கைக்கு சீனா உதவ வேண்டும்.
இவ்வாறான உதவிகள் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெரும் உதவியாக அமையும். ஆசியாவை வலிமையாக்க ஆசிய நாடுகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 'யுவான் வாங் 5' (படங்கள்)
சீன கப்பல் விவகாரம் - இலங்கையின் ஐ எம் எஃப் செயல்முறைக்கு அச்சுறுத்தல்..! வெளியாகிய தகவல்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையுடன் இலங்கை வருகிறது சீனக் கப்பல்...! கடும் எச்சரிக்கை விடுத்த இந்தியா