சூடுபிடிக்கும் சீனக் கப்பல் விவகாரம்..! சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

Hambantota Government Of India Government of China China Ship In Sri Lanka Yuan Wang 5
By Kiruththikan Aug 14, 2022 08:24 AM GMT
Report

யுவான் வாங் 5 

"யுவான் வாங் 5" கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என சீனா உறுதியளித்துள்ளது.

சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சீனாவின் "யுவான் வாங் 5" கப்பலானது இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிபர் நேற்று தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் குறித்த கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையவுள்ளது என்றும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு வலியுறுத்தல்

சூடுபிடிக்கும் சீனக் கப்பல் விவகாரம்..! சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி | Chinese Ship Hambantota Port Sri Lanka India

இந் நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கா என காரணம் தெரிவித்தாலும் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கப்பல் என்பதால் பாதுகாப்பு அச்சம் நிலவி வருகின்றது, இதனால் கப்பலின் வருகையை இந்தியா எதிர்த்துவந்ததுடன் கப்பலின் வருகைக்கான காரணத்தை விளக்குமாறும் அத்தோடு இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட போகின்றது என்பது குறித்து தெளிவுபடுத்துமாறும் கோரியிருந்தது.

மேலும், இந்நாட்டு கடலில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் செய்யக்கூடாது என இலங்கை அரசு வலியுறுத்தியிருந்தது.

அதன்படி, சீனாவின் யுவான் வாங் 5 கப்பலானது நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என உறுதியளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி 

ஹம்பாந்தோட்டை வரும் சீன கப்பலுக்கு இலங்கை அரசு விதித்துள்ள நிபந்தனை
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026