ஹம்பாந்தோட்டை வரும் சீன கப்பலுக்கு இலங்கை அரசு விதித்துள்ள நிபந்தனை

Sri Lanka India China Ship In Sri Lanka
By Jaso Aug 13, 2022 09:52 PM GMT
Report

 சீன கப்பலுக்கு இலங்கை அரசு விதித்துள்ள நிபந்தனை

  இராஜதந்திர கவனத்தை ஈர்த்துள்ள சீனாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய இலங்கை அரசாங்கம் அனுமதித்துள்ளது.

ஓகஸ்ட் 16 முதல் 22 வரை எரிபொருள் நிரப்புவதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை வரும் சீன கப்பலுக்கு இலங்கை அரசு விதித்துள்ள நிபந்தனை | Chinese Ship Sri Lankan Government Conditions

எனினும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின்படி, இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில் கப்பல் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இந்நாட்டு கடலில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்டைப் பிரதேசத்தின் பாதுகாப்பு

மேலும் அனைத்து நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு கொள்கையை அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அண்டைப் பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், சர்வதேச கடமைகளுக்கு இணங்க அனைத்து நாடுகளின் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதே இலங்கையின் நோக்கமாகும் என்றும் அரசாங்கம் சீனக் கப்பலுக்கு வலியுறுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை வரும் சீன கப்பலுக்கு இலங்கை அரசு விதித்துள்ள நிபந்தனை | Chinese Ship Sri Lankan Government Conditions

குறிப்பாக நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில் இலங்கை மக்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளினதும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026