இந்திய எதிர்ப்புகள் தவிடுபொடி..! நுழைகிறது சீனக் கப்பல் - இலங்கை பச்சைக்கொடி
புதிய இணைப்பு
சீன கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் - 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கைத் துறைமுக அதிபர் நிர்மல் பி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, யுவான் வாங் 5 தற்போது திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக, அதாவது எதிர்வரும் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
அத்துடன், இந்தக் கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் அனுமதி
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இடமளிப்பது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ரணில் இணக்கம் தெரிவித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கண்காணிப்பு கப்பல் திட்டமிட்டதை விட ஐந்து நாட்கள் தாமதமாக ஓகஸ்ட் 16ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உறுதியான காரணங்களை முன்வைக்காத அமெரிக்கா, இந்தியா
இவ்வாறான நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கப்பல் வருகை குறித்து கவலை வெளியிட்டார்.
இதன்போது கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் கோரப்பட்டது.
அதேபோன்று, வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், இரு தரப்பினரும் உறுதியான காரணங்களை முன்வைக்காததால், இலங்கை அரசாங்கம் சீனக்கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கப்பலை நிறுத்துவது இலங்கை அரசுக்கு புவிசார் அரசியல் தலைவலியாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சர்வதேச கடலில் நிலை கொண்டுள்ள சீனக்கப்பல்: வெளியாகியுள்ள செய்மதி புகைப்படம் |
தேவையில்லாமல் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம்..! இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா |
சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை நுழைவு! இந்தியா பதிலடி |